சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.
‘சிறிலங்காவில் பாரிய திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு சீனர்களும், இந்தியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கொழும்பில் 200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் பாரிய திருமணத்தை நடத்துவதற்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய நிகழ்வுக்கு பாரிய இடவசதிகளும், அரங்குகளும் தேவைப்படுகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எப்போது 200 சீன இணையர்களுக்கு சிறிலங்காவில் திருமணம் இடம்பெறப் போகிறது என்ற தகவலை அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிடவில்லை.
முதல்வர் ஜெயலலிதா இறப்பில் தொடரும் மர்மங்கள்.ஆதாரம் இதோ...வீடியோ!!! .
Post a Comment