யுத்த வெற்றுக்கு பிரதான காரணம் சம்பிக்க ரணவக்கயும் ஹெல உறுமயவும்தான் காரணம் என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் பொது பல சேனாவின் ஊடக பேச்சாளர்.
இதிலிருந்து மிகத்தெளிவாக நாம் சொல்லும் விடயம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அதாவது பொதுபல சேனாவை உருவாக்கியது மஹிந்தவோ கோட்டாபயவோ அல்ல, மாறாக சம்பிக்கவும் ஹெல உறுமயவும்தான் என்பதுதான் அது.
அன்று மஹிந்த பொதுபல சேனாவுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதற்கு சம்பிக்க தடையாக இருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆனாலும் அவரையும் மீறி மஹிந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மஹிந்தவை வீட்டுக்கனுப்பி மைத்ரி, ரணிலைக்கொண்டு வந்தது. இப்போது மஹிந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பொது பல சேனாவுக்கு பல கொம்புகள் முளைத்தது போல் குதிக்கிறது. அவர்களை கைது செய்ய விடாமல் சம்பிக்க தடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மையாகும். அது மட்டுமல்ல ஞான சார சொல்வதை அமுல்படுத்தும் அரசாக இன்றைய அரசு மாறியுள்ளது. இது முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்துக்களை கொடுக்கும். அனேகமாக இனி ஞானசார வெளியில் நின்று சத்தமிடாமல் உள்ளிருந்தே முஸ்லிம்களுக்கெதிராக சதிகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதை அறிவிக்கிறது பொது பல சேனாவின் ஊடகப்பேச்சாளரின் சம்பிக்க பற்றிய பாராட்டாகும்.
ஆகவே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பார்வையில் மாற்றம் தேவை. யுத்த வெற்றிக்கு காரணம் சம்பிக்க அல்ல, மஹிந்த ராஜபக்ஷ என்ற அரசியல் ஆளுமை என்பதை முஸ்லிம் சமூகம் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அத்துடன் எதிர்த்தரப்பு அரசியலையும் முஸ்லிம் சமூகம் ஊக்குவிக்காவிட்டால் நம்மை வைத்துக்கொண்டே நம்மை அழிக்கும் திட்டங்களை நிறைவேற்றி விடுவார்கள்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி
Post a Comment