ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக ஆளுநர் அறிவித்தார். ஆனால் அவரது இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
நிச்சயமாக ஜெயலலிதா அதற்கு முன்னரே இறந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 7 மணியளவில் அப்பல்லோவில் இருந்து சசிக்கலா, போயஸ் கார்டன் பணியாளர் ஒருவருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது ஜெயலலிதாவின் பச்சை கலர் மடிசார் புடவை, கைக்கடிகாரம், வைர டாலர் செயின், மோதிரம் ஆகியவற்றை எடுத்து வர சொல்லி உள்ளனர். அவற்றை எடுத்துச் சென்றது தனக்கு தெரியும் என ஒரு அதிகாரி விகடனுக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த அதிகாரி கார்டனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அம்மா காலமானார் என்ற செய்தி எந்த நேரமும் வெளியாகலாம் என கூறினராம்.
இந்த செய்தி ஜெயலலிதா ஏற்கனவே இறந்ததை உறுதி செய்வதாக உள்ளது.

Post a Comment