அப்போல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் முன்னுக்கு பின் முரணான பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உதவிய சில டாக்டர்கள் மற்றும் சில செவிலியர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் வாய் திறக்க தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணியளவில் சன்னமான குரலில் பேசி கொண்டிருந்த முதல்வர் ஜெ அவருக்கு மிகவும் பிடித்த ஸ்பெஷல் காபி கேட்டுள்ளார்.
சர்க்கரையில்லாத ஸ்பெஷல் காபி சிறிதளவு கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் காபியை குடிக்கும்போதே புரையேறி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் செய்யபட்டுள்ளது. அப்போது அதிகளவில் மூச்சிறைப்பு ஏற்பட்டு உடல் முழுவதும் வியர்வையால் நனைந்தது என அப்போது அங்கு உதவியாளராக பணிபுரிந்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.டாக்டரின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment