திருகோணமலை சிறைச்சாலையில் சிறைக்கைதியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றிரவு (12) 7.30 மணியளவில் மீட்டகப்பட்டதாக துறைமுகபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் தம்பலகமம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கே.பரமேஸ்வரன் என்பவரே தூக்கில் தொங்கியவராவர்.
திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நிலையிலே அரைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த நபர் உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலத்தினை கையளிக்க உள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் facebook மூலம் அறிய எமது Like Page இனை லைக் செய்யுங்கள்
( https://www.facebook.com/ijsfastnews )

Post a Comment