ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் எதிர்பார்த்த கருப்புப்பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தற்போது அதிரடியாக வருமானவரி சோதனையில் ஈடுபட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை உள்பட நாடு முழுவதும் பல வருமான வரி சோதனை நடந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஹவாலா டீலர் ஒருவரின் வீட்டின் ரகசிய குளியலறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் 2000 நோட்டுக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
இந்த குளியல் அறையில் ரூ.5.7 கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள், ரூ.90 லட்சம் பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 32 கிலோ தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment