Ads (728x90)

by=>Abdur_Rahman(akp)
சதிகாரர்களே!
உயிரைக் கிழித்து வேதனைகளின் ஒட்டுமொத்தங்களையும் வெளியே ஓட விட்டிருக்கிறீர்கள். விரட்டி விட்டிருக்கிறீர்கள்
இதோ உங்கள் குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து கொண்டே இருக்கின்றன. மனிதாபிமானத்தை இடித்து விட்டு எங்கள் கட்டடங்களை இடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
.
கூக்குரல்களும் மரணத்தின் ஓலங்களும் ஆற்றாமையால் வடிந்த சப்தங்களுமே என் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்களும் போடும் மரணத்தின் உச்ச ஓலமாவது உங்கள் மனசின் வரண்ட பகுதியில் கொஞ்சமாவது ஈரத்தை இறைக்கவில்லையா.
.
யுத்தமும் ரத்தமும் எனக்குப் புதிதல்ல. இப்போதைக்கு மரணம் தான் எனக்குப் புதியது. இதோ ரத்தம் பீறிடுகிறது.
இந்த ரோஜாவின் மேல் இரத்தத்தைப் பூசியிருக்கிறீர்கள்.
சிவப்போடு சிவப்பைக் கலந்து இருக்கிறீர்கள்.
ஆ வலிக்கிறது. கண்களை என்னால் திறக்க முடியவில்லை.
இங்கே நடக்கும் அநியாயத்தை பார்த்தும் பாராமல் இருக்கும் உலக நாடுகள் போல என் கண்களும் மூடியே இருக்கின்றன
.
என் தந்தையையும் தாயையும் கொன்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.. இல்லையெனில் அவர்களே என்னை தூக்கி ஓடி வந்திருப்பார்கள். அத்தனை வலிகளையும் தாங்கி என்னை இடிபாடுகளுக்கிடையில் தேடியிருப்பார்கள்.
.
பாவம் என் சகோதரன். நானென்றால் இரக்கம் அவனுக்கு.
தந்தை என்னைத் திட்டினால் கோபத்தில் தந்தையை தாக்குவதாக நினைத்து அவரின் முழங்காலைப் பிடித்து கிள்ளுவான். அவனால் முடிந்தது அவ்வளவு தான். என் மேல் அளவுகடந்த பாசம் அவனுக்கு. ஓ இப்போது இரத்தம் பீறிடும் என்னுடலை தாங்கிக் கொண்டிருக்கிறானா. அந்தோ பரிதாபமே..
வேதனையால் வந்த கண்ணீரை நிறுத்திவிட்டு உனக்காக அழுகிறேன் சகோதரா.
.
அப்பாவிகளைக் கொல்லும் கொலை வீரர்களே!
கொசுவுடைய இறக்கைக்கும் பெறுமதியில்லாத இந்த உலகம் உங்களுக்காகத்தான் அனுபவியுங்கள்.
அத்து மீறுங்கள். அடக்கி ஒடுக்குங்கள். இது உங்களுக்கான சுவன உலகம். கேட்பார் பார்ப்பார் யாருமில்லை.. எடுத்துக் கொள்ளுங்கள்.
என் தந்தையின் சடலத்துக்கு மேல் உட்கார்ந்து கொண்டு கொன்ற சந்தோசத்தை மது அருந்திக் கொண்டாடுங்கள்.. என் தாயின் பர்தாச் சீலையைக் கிழித்து கீழே போட்டு சீட்டு விளையாடுங்கள். என் சட்டையைப் பிய்த்து எடுத்து உங்கள் துப்பாக்கியில் அப்பியிருக்கும் புளுதியை துடைத்துக் கொள்ளுங்கள்.
.
கொசுவுடைய இறக்கைக்கும் பெறுமதியில்லாத இந்த உலகம் உங்களுக்காகத்தான் அனுபவியுங்கள்.
இந்த உலகில் உங்களை விட்டு விடுகிறேன்
நாளை இறைவனின் சந்நிதானத்தில் நிச்சயமாக சத்தியமாக உங்களை மன்னிக்கவே மாட்டேன். தேடி வருவேன். தீராத பசியோடு பழிவாங்க வருவேன்.
என்னைப் போன்ற மரணித்த கூட்டத்தாரோடு சேர்ந்து உங்கள் ஒவ்வொருத்தனையும் காட்டிக்கொடுக்க வருவேன்..
உங்கள் அத்தனை படைகளும் என் தனி ஒருத்தியைக் கண்டு நடுங்கும் பலத்தை எனக்கு என் இறைவன் தருவான். அந்த நாளுக்காக வெறியோடு காத்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வாருங்கள்.
.
இதோ நீங்கள் அலப்போ நகரையும்...
மலக்குல் மவ்த் என் உயிரையும் கைப்பற்றும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். போகிறேன் சதிகாரர்களே.. காத்துக் கொண்டு இருக்கிறேன் வந்து சேருங்கள். மன்னித்துவிடு என் சகோதரா..
لا اله الا الله محمد رسول الله
Image may contain: 1 person, close-up

Image may contain: 1 person, outdoor
Image may contain: one or more people and people sitting
Image may contain: 2 people, people standing and beard
Image may contain: 1 person, sitting
Image may contain: 1 person



Post a Comment